“யார் நீ?”, என்றேன்
“உன் பசிக்கு உணவாய் ,
நோய்க்கு மருந்தாய் ,
வலிக்கு வழியாய் ,
கற்பனைக்கு ஊற்றாய் ,
வாழ்க்கைக்கு துணையாய்
இருந்தேன்”, என்றாள்
“எங்கு இருப்பாய்?”, என்றேன்
“அலை கடலின் ஒலியாய் ,
மக்களின் மழலையாய் ,
நல் மாதின் தீங்குரலாய் ,
இளவேனில் காற்றின் அசைவாய் ,
சப்தமாய், நிசப்தமாய்
இருப்பேன்”, என்றாள்
“எப்பொழுது பிறந்தாய் ?”, என்றேன்
“உன் பாட்டனின் பாட்டன் காலத்திற்கும் முன்,
இவ்வுலகம் உருவாகும் முன்,
மொழி என்னும் வடிவம் பிறக்கும் முன்,
மானிடா , நீ உருவாக்கிய பிரிவுகளிற்கும் முன்,
நேரம் என்னவென்று உணர்வதற்கும் முன்,
நான் இருந்தேன்”, என்றாள்
“ஏன் பிறந்தாய் ?”, என்றேன்
“நொந்து போன உனக்கு ஊக்கமாய்,
சோர்ந்து போன உனக்கு ஊட்டமாய்,
வரவேண்டியவர் வராத நேரத்தில் உறவாய்,
சுக துக்கங்களை பகிர்ந்த உயிர்த்தோழியாய்,
உன்னுள், உன் உடலாய், உயிராய்”
இருக்கவே வந்தேன்” என்றாள்
“இறை என்று அறிந்தேன்! தொழுதேன்.”, என்றேன் ,
லேசான புன்னகையுடன், “நீ ரசித்த இசையே !”, என்றாள்
என் தோழி ! என் காதலி!
Come Tamizh new year and a poetry contest was announced at my workplace. Actually, the best part about my workplace is not the work itself, but these niceties that kick my creativity real hard. When the left half of the brain is left to be idle, it is the right half that comes to my rescue. A huge thanks to the “TZRejuvenators” for really being the reason for rejuvenation.
The sheer unadulterated beauty of the Tamizh language can never be compensated when written out in English font. However, for the benefit of my friends who cannot read the language, but can follow the language, I’ll write this up in English and also provide a brief explanation.
Yaro Yaro Yaro Aval
“Yaar Nee?”, Endren
“Un pasikku unavaai,
Noikku marundaai,
Valikku vazhiyaai,
Karpanaikku ootraai,
Vaazhkaikku thunayaai
irunden”, endraal
“Engu Iruppaai?”, Endren
“Alai kadalin Oliyaai,
Makkalin mazhalayaai,
Nal maadhin theenkuralaai,
Ilavenil kaatrin asaivaai,
sabthamaai, nisabthamaai
iruppen”, endraal
“Eppozhudhu Pirandhaai?”, Endren
“Un paatanin paatan kaalathirkum mun,
Ivvulagam uruvaagum mun,
Mozhi ennum vadivam pirakkum mun,
Maanida, nee uruvaakiya pirivugalirkum mun,
Neram enna vendru unarvadharkum mun,
naan irunden”, endraal
“En Pirandhaai?”, endren
“Nondhu pona unakku ookkamaai,
Sorndhu pona unakku ootamaai,
Varavendiyavar varaadha neratthil uravaai,
suga dhukkangalai pagirndha uyirtthozhiyaai,
unnul, un udalaaai, uyiraai”
irukkave vanden”, endraal
“Irai endru arinden! Thozhuden.”, endren,
lesaana punnagayudan, “Nee rasittha isaiye!”, endraal
en thozhi! en kaadhali!
The whole poem was written in a question – answer pattern. The answers to the questions provide clues to guess the protagonist of the poem. Although, the answer and the theme behind the poem is reasonably obvious, the poem ends on a note , where the author’s guess is told to be wrong and the subject unravels herself with a slight smirk.






